Wednesday, January 28, 2015

கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் காணபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?

கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் காணபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.

● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

உரையாடல் நிகழ்வதாய் பயிற்சி அமைந்தால் நன்றாக இருக்கும்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்து நிறைய கருத்துகள். மகிழ்ச்சி.
வெறும் பேச்சை விடுத்து செயல்பாடுகளுடன், அனைவரும் பங்கேற்கும் வகையில் உரையாடல் நிகழ்வதாய் பயிற்சி அமைந்தால் நன்றாக இருக்கும்.
பயிற்சியில் முடிவு செய்த செயல்திட்டங்களை வகுப்பறையில் பயன்படுத்தி விளைவுகளை அடுத்த பயிற்சியில் விவாதிக்கவும் வேண்டும்.
ஆசிரியர்களுக்கு தேவையான கற்பித்தல் மூலங்களை வழங்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.


சரி,
ஒருநாள் பயிற்சியில், அதன் முக்கியத்துவம் தெரிந்த ஆசிரியர்கள் முழுமையாக பங்குபெறவே இவ்வளவு மாற்றங்கள் தேவையென்றால்
ஆண்டுதோறும்,
குழந்தைகள் புதிதாக கற்றுக்கொள்ளும் வகுப்பறை எவ்வளவு மாற்றங்களை அடைய வேண்டும்?

Tuesday, January 20, 2015

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 47 வகை நீர்நிலைகள் !!!

     
ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ நேரடியாக சொல்ல முடியாத பல பெயர்கள், சொற்கள் தமிழில் உள்ளன. அதற்கு இதுவே சான்று. நீர் நிலைகளுக்கு எத்தனை வகையான சொல்லாடலை கையாண்டு உள்ளனர் தமிழர்கள். இன்று இத்தகைய சொற்களை தமிழர்கள் பயன்படுத்துவதை குறைத்து கொண்டு வருகின்றனர் என்பது வேதனை. இந்த சொற்களை எல்லாம் மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வருவது தான் தமிழ் மொழியை நாம் மீட்டெடுக்கும் அரும்பணியாகும்.
01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்படட நீர் அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் - (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படு நீர் நிலை.
24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

Friday, January 9, 2015

Indian Council Act of 1861

Indian Council Act of 1861

• The three separate presidencies (Madras, Bombay and Bengal) were brought into a common system
• System of legislative devolution in India was inaugurated.
• The Act added to the Viceroy's Executive Council a fifth member - a jurist.
• For purposes of legislation, the Viceroy's Executive Council was expanded by the addition of not less than six and not more than 12 additional members, who would be nominated by the Governor-General and would hold office for two years. Therefore, the total membership increased to 17.
• Not less than half of these members were to be non-officials.
• The legislative power was to be restored to the Council of Bombay and Madras, while Councils were allowed to be established in other Provinces in Bengal in 1862 and North West Frontier Province (NWFP) in 1886, Burma and Punjab in 1897.
• In 1859, Canning had already introduced the Portfolio system. Under this portfolio system, the work of the Government, divided into several branches, was entrusted to different members of the Governor General's council. The act of 1861 envisaged that the member in-charge of his department could issue final orders with regard to matters which concerned his department. In 1861, the portfolio system led to creation of some kind of cabinet system.
• In 1862, Lord Canning nominated three Indians to his legislative council-the Raja of Benaras, the Maharaja of Patiala and Sir Dinkar Rao.
• The Act added to the Viceroy's executive council a fifth member who was a jurist. For the purpose of legislation, the Viceroy's Executive Council was expanded by the addition of not less than 6 and not more than 12 additional members who would be nominated by the Governor-General and would hold office for two years. Not less than half of these members were to be non-officials.