Saturday, November 19, 2022

காந்தாரா - பஞ்சுர்ளி

தென்தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வணங்கப்படும் #முத்தாரம்மன், #பேச்சி #பிரம்மசக்தி, #வைரவர், #இசக்கியம்மன், #மாயாண்டி #சுடலைமாடசுவாமி, போன்ற தெய்வ வழிபாட்டையே இந்த பஞ்சுர்ளி போன்ற தெய்வ வழிபாடுகளும் தழுவி இருக்கும். 

துளுநாடு என்று அழைக்கப்படும் பகுதி கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, தக்ஷணகனடா என்ற இரண்டு மாவட்டமும், கேரளத்தில் காசர்கோடு சுற்றியுள்ள குறுகிய பகுதியுமாகும். இந்த துளுநாட்டில் பஞ்சுர்ளி, கல்லுர்ட்டி, குழிகா, கல்குடா, ஜூமாட்டி என்ற தெய்வங்களோடு எண்ணிலடங்காத பல தெய்வங்களை வணங்கி வருகின்றனர் இந்த துளுநாட்டவர்கள். காந்தாரா திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. அதில் வரும் வேடம் கட்டிய கதாப்பாத்திரத்தின் பெயர்தான் பஞ்சுர்ளி ஆகும். 
பஞ்சுர்ளி 1 : அடர்ந்த வனத்தில் ஐந்து பன்றி குட்டிகள் சேர்ந்து வாழ்ந்து வந்தது. அப்போது திடீரென ஒரு பன்றி குட்டி மட்டும் வழிமாறி தனித்து செல்கிறது. இதனை கண்ணால் கண்ட பார்வதி தேவி வனத்தில் தனித்து நின்ற பன்றி குட்டியை மீட்டு ஆதி கைலாச பர்வதத்திலே கொண்டு வந்து செல்லமாக வளர்கிறார். சில நாட்கள் செல்ல பன்றி குட்டி தனது இயல்பில் கைலாச விளைநில நெல்மணிகளை நாசம் செய்கிறது. இதை கண்ணால் கண்ட ஆதிசிவபெருமான் இந்த பன்றி குட்டி இனிமேல் இங்கு இருத்தல் ஆகாது என்று பன்றி குட்டிக்கு வேண்டிய வரமும், கைலாச சன்னதியில் நெல்மணியை அழித்ததால் பூலோகம் சென்று நெல்மணிகளை தெய்வமாக நின்று காத்தல் வேண்டும் என்று விடைகொடுத்து அனுப்புகிறார் ஆதி சிவபெருமான். 
பஞ்சுர்ளி 2 : மாயவனின் வராக அவதாரத்தை வைத்து வணங்கப்படுகிறது என்றும் நடப்பாண்டில் வாழும் மானிடர்கள் சொல்கிறார்கள். 
பஞ்சுர்ளி 3 : வராஹி அம்பாளின் வடிவமாகவும் நினைத்து சில மக்கள் வணங்குகிறார்கள். கல்லுர்ட்டி: இந்த பஞ்சுர்ளி ஆண் சுவாமியோடு கல்லுர்ட்டி என்ற பெண்தெய்வத்தையும் துளுநாட்டவர்கள் வணங்குகிறார்கள். 

வணங்கும் முறை யாதெனில் "கல்லுர்ட்டி சுவாமியை அம்மாவாகவும், பஞ்சுர்ளி சுவாமியை தாய்மாமனாகவும் துளுநாட்டவர்கள் வணங்குகிறார்கள். குழிகா: இந்த பஞ்சுர்ளி, கல்லுர்ட்டி, தெய்வத்தோடு குழிகா என்ற காவல் தெய்வமும் இருப்பார். இவர் சாம்பல் துகளின் ஒரு கல் வெடித்ததில் அவதரித்தவர் இந்த குழிகா சுவாமி. இவரையும் ஆதி சிவபெருமான் வைகுண்டம் அனுப்பவே அங்கு இந்த குழிகா சுவாமி பிறக்கும்போதே தாயின் வயிற்றை கிழித்து ஆங்கார சொரூபத்தோடு தீரா பசியில் ஒரு ஊரையே விழுங்கும் வல்லமையோடு பிறந்தார். இப்படிப்பட்ட இந்த குழிகா சுவாமியின் பசியை தீர்க்க ஸ்ரீ மஹாவிஷ்ணு தனது சுண்டுவிரலையே வெட்டி கொடுத்த பிறகு தான் இந்த குழிகா சுவாமியின் பசி தீர்ந்தது. தற்போது துளுநாட்டில் பஞ்சுர்ளி கோயிலில் சேத்திரபாலனாக காவல் புரிந்து வருகிறார் குழிகா சுவாமி. வேளாண் விவசாயிகள் இந்த பஞ்சுர்ளி, கல்லுர்ட்டி, குழிகா ஆகிய சுவாமிகளிடம் குறிகேட்ட பிறகே எந்தவொரு விசயத்தையும் ஆரம்பிப்பார்கள். இந்த மூன்று சுவாமிகளுக்கும் வருடத்தில் ஒரு நாள் திருவிழா எடுக்கப்படும். அப்போது பூத கோலா என்று ஒரு கலையும் அரங்கேறும். அதில் பஞ்சுர்ளி, கல்லுர்ட்டி, குழிகா என்ற சுவாமிகள் வேடம் கட்டி ஆடுவார்கள். (பெண்கள் ஆடுவதில்லை) சுவாமியின் அருளானது இந்த வேடம் கட்டிய நபர்களின் மேலே இறங்கும். அப்போது அவர்கள் தெய்வ வாக்குகள் குறி சொல்வார்கள். இதே போன்று தான் கதகளி நடனமும் பல இதிகாசங்களை தளம் அமைத்து நடத்துவார்கள் ஆனால் அதில் சுவாமியின் அருளானது வராது என்பது குறிப்பிடத்தக்கது.  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வணங்கப்படும் முத்தாரம்மன், பேச்சிபிரம்மசக்தி, வைரவர், இசக்கியம்மன், மாயாண்டி சுடலைமாடசுவாமி, போன்ற தெய்வ வழிபாட்டையே இந்த பஞ்சுர்ளி போன்ற தெய்வ வழிபாடுகளும் தழுவி இருக்கும். *காந்தார படத்தில் முதல் காட்சியில் வரும் காட்சிகள் வெளிப்படுத்துவது பண்டைய காலங்களில் எத்தனை பெரிய தர்மகர்த்தா வாக இருந்தாலும் மன நிம்மதி இல்லாமலும், புத்திர பாக்கியம் இல்லாமலும் தனக்கு இருக்கும் நஞ்சை, புஞ்சை நிலத்தை எல்லாம் கோயிலுக்கு எழுதி வைத்தது போன்றவற்றை கண்ணில் காண்பித்தது* *காந்தாரா**சுவாமி கோமரத்தாடிகளை ஏளனம் செய்யும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கதைத்தளம் அமைந்தது மிகவும் சிறப்பு (கிராமங்களில் இன்றும் தெய்வத்தின் அருளாடும் கோமரத்தாடிகளை விமர்சனம் செய்யும் நபர்கள் ஏதோ ஒரு வடிவில் துன்பத்திற்கு உள்ளாவதை கண்முன்னே நிறுத்தியது)* *காந்தாரா* *குல தெய்வம் வழிபாடோ அல்லது வாரிசு வழிவரும் தெய்வ அருளோ,அல்லது கிராமிய கலையாகட்டும் ஏதோவொன்று முன்னோர் வழியில் மரபணுவின் 0.1% நம்மை அடைகிறது. நாம் பிறந்து வாழும்போது இயற்கையாகவே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது அந்த மரபணு. அப்போது இரத்தத்தில் 100% முன்னோர்களின் செயல்கள் நம்மை தொடரும்.

 நாட்டில் பல விசயத்தில் தாமாகவே நிகழ்த்தி ஆச்சர்யமூட்டுகிறது மரபணு. உதாரணத்திற்கு ஒரு இசை கலைஞரின் மகனோ அல்லது பேரனோ மருத்துவராக இருக்கலாம் ஆனாலும் அவரின் மரபணு மற்றும் இரத்தத்தின் தொடர்பு சம்பந்தப்பட்ட முன்னோர்கள் இசைத்த இசையை முறைப்படி கற்காமல் இசை கலைஞரை விட அவ்வளவு எளிதாக அந்த மருத்துவரே நுணுக்கமாக இசைப்பதே தவிர்க்கமுடியாத ஒன்று. இவையை பஞ்சுர்ளி பூத கோலா மூலம் காண்பித்தது* *காந்தாரா*சுருங்கச்சொல்லின் இந்த காந்தாரா திரைப்படத்தை பார்க்கும் முன்பு ஏற்பட்ட நமது வாழ்வின் ஏதோவொரு அமானுஷ்ய மற்றும் இரத்த மரபணு சம்பந்தப்பட்ட வெளிப்பாட்டின் அனுபவமே நமக்கு சிறந்த ஆசானாக தெரியும். அனுபவம் இல்லையென்றால் #காந்தாரா திரைப்படம் பார்த்து அனுபவத்தை உணருங்கள். கடைசி சில நிமிடங்கள் உங்களை பாதுகாக்கும் உங்கள் தெய்வம் உங்கள் மேனியில் உணர்வீர்கள். இது போன்ற பல வழிபாட்டு முறையை வெளிக்கொண்டு வருவோருக்கும், வெளிக்கொண்டு வந்த ரிசப்ஷெட்டி அவர்களுக்கும் நன்றிகள்!! இது ஒரு தேடுதலுக்கான விதை. இதைப்போன்ற திரைப்படம் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழும்.

No comments:

Post a Comment