Wednesday, November 9, 2022

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது

மதுரையில் மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேச கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ண பட்டிருக்கிறது.

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றி தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

அப்படி எந்த நகையையாவது விலைக்கு வாங்க முடியாவிட்டால், அதை இரவல் வாங்கி தனது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வினோத ஆசை அவருக்கு இருந்தது.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்து பெரிய சபையர் கற்கள் பதித்த ஒரு நீல பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்கு கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனித காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்லை என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்த பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படி பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

மதுரையில் இப்போதெல்லாம் ஆறு மாதங்கள் ஆட்சியராக நீடிப்பது துர்லபம். பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறி போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகி போயிருக்கும்.பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்து போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்த கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்கு கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல தேடினார். சிறுமியை காணவில்லை.

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்கமுடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்த காணிக்கை காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன....

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழா காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

முப்பது ரூபாய் குழல் மின் விளக்கை கோயிலுக்கு தானம் கொடுத்தாலும் "இன்னார் உபயம்" என்று பொறித்து கொடுப்பதுதான் மதுரை மரபு. சரித்திரம் முக்கியமல்லவா. வெளிச்சமே தெரியாமல் போனாலும், விளக்கு முழுவதும் தெரியும்படி கொட்டை எழுத்துகளில் இனிஷியலோடு முழு பெயர், ஊருடன் எழுத படவேண்டும்.

அயல்நாட்டை சேர்ந்த பீட்டருக்கு இதன் தாத்பரியம் சரியாக பிடிபடவில்லை. பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்கு திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சி பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

Tuesday, October 4, 2022

ஏன் எனத் தெரியுமா உங்களுக்கு?

நேற்று ஸ்வான்டே பாபுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

 ஏன் எனத் தெரியுமா உங்களுக்கு? 

தற்கால மனிதனை  ஒத்த  ஒரு இனம் பூமியில் வாழ்ந்துள்ளது. இதன் பெயர்  நியான்டர்தல் (Neanderthals). இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு வாழ்ந்துள்ளனர். இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தோற்றியுள்ளனர். பின்னர்  சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் மனித இனம் (Homo sapiens)
ஆப்பிரிக்காவில் தோன்றியது. பின்னர் சுமார் மனித இனம் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டுப் பிற கண்டங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தனர். பின்னர் என்ன நடந்தது எனச் சரியாகத் தெரியவில்லை. நியான்டர்தல் இனம் மக்கள் படிப்படியாக இந்த பூமியில் வாழமுடியாமல் அழிந்து போனார்கள். ஆனாலும் மரபணு சோதனைகள் செய்ததில் ஒரு ஆச்சரியத்தை உணர்ந்தனர். ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்தில் வாழும் மக்களிடையே நியான்டர்தல் இன மரபணு 4 விழுக்காடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தற்கால மனித இனத்துடன் நியான்டர்தல் இனம் இணைந்து ஒன்றரக் கலந்து விட்டதாகப் புரிந்து கொள்ளலாம். 

இந்தச் சூழலில்  ஸ்வான்டே பாபு (Svante Pääbo) மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து பண்டைய மனித இனத்தை ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் சைபிரியா பகுதிகளில் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டனர். காரணம் இந்த பகுதிகளில்  மனித எலும்புகள் மட்டும் அல்ல எந்த உயிரினத்தின் எலும்பாக இருந்தாலும் நீண்ட காலம் சேதமடையாமல் இருக்கும். அதனில் இருந்து எளிதில் மரபணுவைப் பிரித்தெடுக்க முடியும். ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் கிடைக்கும் பண்டைய எலும்புகளிலிருந்து மரபணு பிரித்தெடுப்பது சற்று கடினமானது. காரணம் இங்கு இருக்கும் சாதகமான வெப்பநிலையில் எலும்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் தின்றுதீர்க்கப் படும். சைபீரியாவில் உள்ள கடும் குளிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் கொட்டம் அடக்கப்படும். அதனால் பண்டைய எலும்புத் துண்டுகளிலிருந்து எளிதில் மரபணுவான DNAவை பிரித்தெடுக்க முடியும். 

பாபு மற்றும் அவரின் கூட்டாளிகள் சைபிரியாவில் ஒரு மனிதனை ஒத்த உடம்பின் விரல் ஒன்றைக் கண்டறிந்தனர். அந்த இனம் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது எனக் கண்டறிந்துள்ளனர்.  அந்த விரலின் எலும்பிலிருந்து மரபணுவான DNAவை பிரித்தெடுத்து ஆய்வு செய்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. காரணம் அந்த விரல் தற்கால மனிதனுடையது இல்லை. மேலும் நியான்டர்தல் இனத்தைச் சார்ந்ததுவும் இல்லை ! ஏன் மனிதனுக்குச் சகோதரனான மனித  ( சிம்பனிசி) குரங்குகளுடையதும்   இல்லை ! இந்த விரல் இதுவரை கண்டறியாத ஒரு புது மனித இனத்துடையது எனக் கண்டறியப்பட்டது. அந்த இனத்திற்கு  டெனிசோவான்ஸ் (Denisovans) எனப் பெயரிட்டனர்.  இந்த இனத்தின் மரபணு கிழக்கு ஆசிய மக்களின் மரபணுவில் சுமார் 6 விழுக்காடு கலந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். 

ஆக, மூன்று முக்கிய மனித இனங்கள் இருந்துள்ளன. அவைகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன என்பதே இவர்களின் கண்டுபிடிப்பு. இதற்காகவே ஸ்வான்டி பாபுக்கு நேற்று இரவு (04/10/22)  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் ஆவர். நோபல் வழங்கும் நாடும் சுவிடன்தான். ஆனால் இவர் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சியகத்தில் இயக்குநராகப் பணிபுரிகின்றார்.

Saturday, October 1, 2022

நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?

‘நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’
என்று ஒரு சொலவடை இருக்கு.
 
‘ஏய்ச்ச’ என்றால் ஏமாற்றிய என்று அர்த்தம்.

ஆடுமேய்க்கும் ஒருவன் ஆட்டுப்பட்டி அருகே அமர்ந்திருந்தான். கோடைகாலத்தில் தாகமெடுத்த நரி ஒன்று தண்ணீர் தேடி அந்த பக்கமாக வந்தது.  

நரி ஆடு மேய்ப்பவனிடம் தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று கேட்டது.

ஆட்டுத் தொழுவத்தில் தண்ணீர் இருந்தது. ஆனால் நரியை அங்கு குடிக்கச் சொன்னால் தனது தந்திரத்தை பயன்படுத்தி ஆடுகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடும் என்று நினைத்தான்.

சற்று யோசித்து விட்டு நரியிடம் பேசினார்.
“இந்த திசையில் நேராகப் பார். அங்கு தண்ணீர் ஆறாக ஓடுகிறது. நீ அங்கு சென்றால் தண்ணீர் குடிக்கலாம்.” என்றார்.

ஆனால் உண்மையில் அங்கு ஓடியது ஆறு இல்லை. அது கோடைகாலத்தில் தோன்றும்  கானல் நீர்.

நரி தாகம் தீரப்போகும் ஆசையில் துள்ளிக் குதித்து ஓடியது. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்த இடத்தில் நீரோட்டம் இல்லை. ஆனால் இன்னும் தூரத்தில் கானல் நீர் ஓடிக்கொண்டிருந்தது.

நரிக்கு அது நீரோட்டம் போல் தெரிந்தது. அங்கும் ஓடிச் சென்று பார்த்தது. ஏமாந்து போனது.

கானல் நீர் தனக்கு குடிக்க கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நரி ஓடிக்கொண்டே இருந்தது. 
 
தந்திரத்திற்கு பெயர் போன நரியையே ஏமாற்றிய தந்திரக்காரனைப் பற்றிய சொலவடை தான்
‘நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’

‘நான் ஏமாற்றிய நரியே இன்னும் தண்ணீர் குடிக்காமல் அலைகிறது. அப்பேர்ப்பட்ட என்னை நீ ஏமாற்ற நினைக்கிறாயா?’ என்பது தான் அதன் பொருள்.

ஒருவரை எளிதாக ஏமாற்ற முடியாது என அவர் நினைக்கும் போது இந்த சொலவடையை கூறலாம். 
தமிழில் இதுபோல ஏராளமான சொலவடைகள் இருக்கின்றன. ஒரு பெரிய கதையினை இரு வரிகளில் மடித்து வைக்கப்பட்டிருப்பது தமிழின் அழகு. 

வெயில் காலங்களில் நேராக சென்று கொண்டிருக்கும் ரோட்டில் தூரமாக பார்த்தால் கானல் நீர் உங்களுக்கு தெரியும். 

மரம் போன்ற உயரமான பொருள்களிலிருந்து வரும் ஒளி தரையை நோக்கிக் செல்லச்செல்ல காற்றின் வெவ்வேறு அடுக்குகளில் முழு அக எதிரொளிப்பு அடையும்.

இதனால் ஒளி தரையின் அடியிலிருந்து வருவது போன்ற ஓர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். காற்று அடுக்குகளின் அசையும் தன்மையினால் நீர் நிலையில் இருந்து எதிரொளிப்பது போன்று தெரியும். அல்லது பொருளுக்கு அடியில் ஈரப்பரப்பு உள்ளது போனறு தெரிவதைத் தான் கானல் நீர் என்று அழைக்கிறோம்.

அந்த கானல் நீர் பற்றி இந்த சொலவடையில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றனர் பார்த்தீர்களா!.

Friday, June 10, 2016

தெரிந்துகொள்வோம்


*ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
* உலகப் புகழ் பெற்ற ‘மோனோலிசா’ ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 உள்ளன.
* தேசியக் கொடியை முதன் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். 1291ல் உருவாக்கப்பட்டது.
* அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரிது.
* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் உயிர் வாழும்.
* ஒரு பென்சிலைக் கொண்டு, 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.
* பாம்புகளுக்கு கேட்கும் சக்தி இடையாது.
* நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
* வெள்ளை என்பது ஒரு நிறம் கிடையாது. அது 7 வண்ணங்களின் கலவை ஆகும்.
* முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய், மரத்தில்ருந்து பகலில் விழாது. இரவில்தான் விழும்.
* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். நாய்க்கு நாக்கில் மட்டும்தான் வியர்க்கும்.
* சிலந்திப் பூச்சிக்கு 8 கண்கள் உண்டு.
* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*ஆஃப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
*இந்தியாவில் தமிழில்தான் பைபிள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.

Thursday, April 23, 2015

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) - ரீபைண்ட் ஆயில்( Refined oil)

 ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
    மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.‪
    #‎ உண்மையில்‬ ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
‪    #‎ எண்ணெய்‬ விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
‪    # ‎கடந்த‬ 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
    யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.
    அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா, அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே!
    அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..
    ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது, எள்எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
    நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.
    நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ, அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி. ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள்.
    ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எ ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.‪#‎உண்மையில்‬ ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
‪#‎எண்ணெய்‬ விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். ‪#‎கடந்த‬ 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
    யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.
    அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா, அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.
    அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.
    ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
    நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.
நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.
    ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன.
    இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.‪#‎நம்‬ முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
    தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன
    ‎நம்‬ முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர். இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
    புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.

Saturday, March 21, 2015

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

Thursday, March 12, 2015

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்கமுடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளைபக்குவமாக கற்பியுங்கள்.இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்றசேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்யகற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனஎச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக்கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! "